பழனியில் கந்தர் சஷ்டித் திருவிழா: அக்.24 காப்புக்கட்டு: அக்.29 சூரசம்ஹாரம்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்கள் முக்கியமானதாக இருப்பினும் கந்தர் சஷ்டி திருவிழா மட்டுமே முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும்


பழனியில் கந்தர் சஷ்டித் திருவிழா வரும் அக்.24ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்குகிறது. வரும் அக்.29ம் தேதி சூரசம்ஹாரமும், அக்.30ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்கள் முக்கியமானதாக இருப்பினும் கந்தர் சஷ்டி திருவிழா மட்டுமே முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் விழாவாகும். பிரசித்தி பெற்ற இந்த கந்தர் சஷ்டி திருவிழா பழனியில் வரும் அக்.24ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்குகிறது. ஒருவார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை துவக்குகின்றனர். விழாவை முன்னிட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் தினமும் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர், சின்னக்குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், வெள்ளிக்காமதேனு, தங்கமயில், தங்கசப்பிரத்தில் சுவாமி புறப்பாடும், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. ஆறாம் நாள் திருவிழாவாக வரும் அக்.29ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
அன்று மதியம் மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் புரிய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி பராசக்தி வேல்வாங்கும் விழா நடைபெறும். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சுவாமி அடிவாரம் வந்தடைவார். மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு மலைக்கோயிலில் சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு நள்ளிரவு அர்த்தஜாமபூஜை நடைபெறும். வரும் அக்.30ம் தேதியன்று மலைக்கோயிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...