டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்: தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்டேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :26 அக்டோபர் 2014, 8:08 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்டேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவடமட், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1.1.2015-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்  15.10.14 முதல் நடைபெற்று வருகிறது. 18-வயது பூர்த்தியடைந்தவர்களை பெருமளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் SVEEP (Systematic Voters Education in Electoral Participation) திட்டத்தின் கீழ் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில்  வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் 128 மையங்களில் நடைபெற்றது.

தியாகராசா தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் மண்டல தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்கடேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மனுக்கள் அளிக்க வந்தவர்களிடம் முகாம் குறித்து விளக்கினார். 2015 ஜனவர் 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் புதியதாக குடிவந்தவர்கள் பெயர்களை இந்த முகாம்களில் வந்து சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மாற்றம், தகப்பனார் அல்லது கணவர் பெயர், உறவுமுறை, முகவரி, வயது மற்றும் புகைப்படம் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சிறப்பு முகாம் 2.11.14-ம் தேதியும் நடைபெறும். மேலும் 10.11.14-ம் தேதி வரை தங்களது பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தினமும் முகாமிடும் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்து பயனடையலாம் என்றார் அவர். அப்போது உடன் வட்டாட்சியர் டி.சாந்தா, நகராட்சி ஆணையாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.