டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரவலான மழை: மேற்குத் தொடர்ச்சி மலை நீர் வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

News image
Updated On :26 அக்டோபர் 2014, 8:29 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு மேற்கேயுள்ள காப்புக் காட்டில் மழை காலங்களில் நீர் வீழ்ச்சிகள் ஏற்படுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக இப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் இவை வறண்டுபோய் கிடந்தன. கடந்த 5 நாட்களாக இப் பகுதியில் பெய்த லேசான மழைக்கு மலையில் நீர் வரத்து வந்துள்ளது.

 விடுமுறை தினமாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அழகர்கோவில், மீன்வெட்டிப்பாறை, செண்பகத்தோப்பு பகுதிகளுக்கு குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் சென்று அருவிகளில் குளித்து, வழுக்குப் பாறையில் சறுக்கி பொழுது போக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.