தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கண்ணிலிருந்து மண் உதிரும் சிறுமி: நாளை வீடு திரும்புகிறார்

கண்ணிலிந்து மண் உதிர்வதாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி புதன்கிழமை (செப்.3) நாளை வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Updated On :2 செப்டம்பர் 2014, 4:54 am

கண்ணிலிந்து மண் உதிர்வதாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி புதன்கிழமை (செப்.3) நாளை வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதி அகரபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் யுவராணி(12)க்கு கண்ணிலிருந்து மணல் உதிர்வதாகக் கூறி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை அளித்த சில நாள்களுக்கு அந்தப் பிரச்னை சரியானாலும், மீண்டும் கண்ணிலிருந்து மண் உதிர்வது தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் அந்தச் சிறுமியை சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவரின் கண்களில் ஒவ்வாமையும், நோய்த்தொற்றும் ஏற்பட்டு இயற்கையாக கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டது. இதனால் கண்களில் படிந்த தூசுக்கள் வெளியேறாமல் அவ்வப்போது வெளியேறுகிறது என்றனர்.

தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுமி புதன்கிழமை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து உதி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஆர்.ரவீந்திரன் கூறியது:

தொடர் சிகிச்சையில் சிறுமிக்கு நல்ல முன்னேறம் ஏற்பட்டுள்ளது. இப்போது கண்ணில் மண் உதிரும் பிரச்னை இல்லை. முதலில் கண்களில் உள்ள பிரச்னை சரியாக வீரியம் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன. இப்போது படிப்படியாக மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

சிறுமி வீட்டுக்குத் திரும்பிய பின்பு மீண்டும் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக சில நாள்கள் கூடுதல் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். தனியறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வரும், புதன்கிழமை வீடு திரும்புவார் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.