மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரத்தில் 2-ம் நாளாக உடலை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: கல்வீச்சு, கடைகள் அடைப்பு

சிதம்பரத்தில் கொலை செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள் இருவரது உடலை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 11:19 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் கொலை செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள் இருவரது உடலை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிலைய வெளிப்புறப்பகுதியில் உள்ள கடைகள் மீது கல்வீச்சு தாக்குதலினால், கடைகள் அடைக்கப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), இவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று  வெடிகுண்டு வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர். மருத்துவமனை முன்பு வெடிகுண்டு வீசியதில் அங்குள்ள கடை மற்றும் கார் ஒன்று கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றது. இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயமுற்ற ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து உடல்கள் வைக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு குற்றவாளிகளையும், கொலைக்கு பின்புலமாக செயல்படுவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக உதவிஆட்சியர் அலுவலத்திற்கு சென்று இச்சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தனப்போக்குதான் காரணம் என்றும், எனவே காவல்துறையினர் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை பெற மாட்டோம் எனக்கூறி கலைந்து சென்றனர்.

இந்நிலையில் 2-ம் நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் காந்திசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் திருமார்பன், கருத்திய மைய துணைப் பொதுச் செயலாளர் திருமாறன், பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கல்வீச்சு, கடைகள் அடைப்பு: ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாக, அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடைகளை மூடச்சொல்லி கல்வீசினர். இதனால் பேருந்து நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கல்வீச்சில் அவ்வழியே வந்த லாரி ஒன்றின் முன்புறக் கண்ணாடி உடைக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அங்கு சென்று கல்வீச்சில் ஈடுபட்ட கும்பலை அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.