மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தல் அறிவிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ  குற்றச்சாட்டு

தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் அளிக்காமல், அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 12:51 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் அளிக்காமல், அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் செப்.18-ம் தேதி உள்ளாட்சி இடைதேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவிப்பு வெளியிட்ட ஆக.28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும், செப்.4 மனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்றும், செப்.8-ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பினால் சிதம்பரம் நகராட்சியில் வார்டு-17, வார்டு 20 உறுப்பினர்கள் மற்றும் அண்ணாமலைநகர் பேரூராட்சி வார்டு -3 உறுப்பினர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் நகராட்சியில் வார்டு 17-ல் போட்டியிட முன்னாள் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியநாரயணன், வார்டு- 20ல் போட்டியிட முன்னாள்  நகரமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், அண்ணாமலைநகர் பேரூராட்சி வார்டு-3ல் போட்டியிட பி.சதிஷ் ஆகியோர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக சென்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்களுடன் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்,மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வெங்கடேசன்,அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா, முன்னாள் நகரமன்றத் தலைவர் ஹெச்.பெளஜியாபேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ்ட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடையே தெரிவித்தது: ஆளும் கட்சியினர் வெற்றி பெறும் வகையில் தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை அறிவித்துள்ளது. இது ஆளும் கட்சியின் மோசமான நிலையை காட்டுகிறது. சில எதிர் கட்சிகள் தேர்தல் புறக்கணித்துள்ளது என்பது சரியான முடிவு இல்லை. அப்படி இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தமிழக அளவில் இந்த இடைதேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி பண பலத்தையும், அதிகார பலத்தையும் ஜனநாயக முறையில் வென்று அமோக வெற்றி பெறும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.