சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் காயங்களுடன் ஆண் சடலம்: அடையாளம் கண்டுபிடிப்பு
சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டம் நியு


சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டம் நியு புதுப்பட்டினத்தைச் சேர்ந்த துரை.பரமசிவம் (55) என தெரியவந்துள்ளது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி எரியப்பட்டதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பாலத்தின் அருகே யூனூஸ்நகர் எனுமிடத்தில் வெள்ளாற்றில் புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. உடலுடன் நீண்ட கயிறு கட்டப்பட்டுள்ளது. இறந்தவர் பச்சை கலர் கால்சட்டையும், வெள்ளை பணியனும் அணிந்துள்ளார். இறந்து போனவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் அவரது உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட கைப்பையில் செல்போன், பாக்கெட் டைரி, ஏடிஎம் கார்டு, இரு வேட்டி மற்றும் பெண்கள் பயன்படுத்தும் பிரா மற்றும் பொருள்களை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். செல்போனில் உள்ள நம்பர் மூலம் தொடர்பு கொண்ட போது இறந்து கிடந்தவர் தஞ்சை மாவட்டம் நியு புதுப்பட்டினத்தைச் சேர்ந்த துரை.பரமசிவம் (55) என தெரியவந்தது. மேலும் இவர் லோடு மேனாக வேலைபார்ப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் பரமசிவம் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி எரியப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் போலீஸார் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது மனைவி தனலட்சுமியை (34) அழைத்து வந்தனர். பின்னர் சிதம்பரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனா தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினார். இறந்து போன பரமசிவத்திற்கு 8-ம் வகுப்பு பயிலும் நிவேதா என்ற மகள் உள்ளார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...