திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் 10பவுன் நகை திருட்டு
அறந்தாங்கியில் அதிமுக பிரமுகர் ஏசி.பாலகிருஷ்ணன் மகள் திருமணம் வியாழக்கிழமை தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது இதிóல் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர் தஞ்சை மாவட்டம்


அறந்தாங்கியில் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் 10 பவுன் தாலிசெயினை வியாழக்கிழமை அதிகாலை கருப்புதுணி கட்டி இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் பறித்துச்சென்றனர்.
அறந்தாங்கியில் அதிமுக பிரமுகர் ஏசி.பாலகிருஷ்ணன் மகள் திருமணம் வியாழக்கிழமை தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது இதிóல் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர் தஞ்சை மாவட்டம் செருவாவிடுதியை சேர்ந்த பழனிவேலு மனைவி சாந்தி(42) என்பவர் புதன் இரவு வந்து திருமண மண்டபத்தில் தங்கியிருந்தார்.
வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மண்டபம் அருகில் உள்ள உறவினர் வீட்டில் குளிப்பதற்காக அவரும் நெடுவாசலை சேர்ந்த போதுமதி(50) இருவரும் நடந்து வந்துள்ளனர். அக்ரஹாரம் நிலவளவங்கி அருகே முகத்தில் கருப்புத்துணியை சுற்றியிருந்த 2 பேர் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்து சாந்தியின் மீது மோதியுள்ளனர் இதிóல் நிலை தடுமாறி விழும்போது அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயனை பறித்துக்கொண்டனர். மேலும் போதுமதியின் வளையலை பிடுக்கும் போது இருவரும் சேர்ந்து கத்தியதை கேட்டு அருகில் உள்ளவர்கள் வரும் முன் மின்னல்வேகத்தில் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து பழனிவேலுவின் புகாரின்பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...