டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

4 மாதத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டவரின் உடல் தோண்டியெடுப்பு

கும்மிடிப்பூண்டி சாய்பாபா நகரை சேர்ந்த லஷ்மணன் மகன் தினகர்(23), கும்மிடிப்பூண்டி அடுத்த பட்டுப்புளி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஜெய்காந்த்(20). இவர்கள் இருவரும் ஞாயிறன்று கும்மிடிப்பூண்டி

News image
Updated On :7 செப்டம்பர் 2014, 12:40 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டியில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு கொல்லப்பட்ட வேலு(36) என்பவரது உடல் ஞாயிறன்று தோண்டியெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி சாய்பாபா நகரை சேர்ந்த லஷ்மணன் மகன் தினகர்(23), கும்மிடிப்பூண்டி அடுத்த பட்டுப்புளி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஜெய்காந்த்(20). இவர்கள் இருவரும் ஞாயிறன்று கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்ரியிடம் நாகூர் மற்றும் ரவி ஆகியோர் வேலு என்பவரை கொலை செய்ததாக அந்த உடலை பட்டுப்புளியில் ஒரு தைலம் தோப்பில் புதைத்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸார் தினகர் மற்றும் ஜெய்காந்தை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீஸார் அவர்களை விசாரித்ததில் தங்களுக்கும் மாதவரம் பகுதியை சேர்ந்த வேலு(36), ரவி என்பவர்களுடன் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு பள்ளியின் பின்புறம் உள்ள ரவியின் வீட்டிற்கு சென்ற போது அங்கு ரவி மற்றும் அவரது நண்பர் நாகூர் வேலுவின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்ததை பார்த்ததாக கூறினார்கள்.

மேலும் ஏன் வேலுவை கொல்ல முயற்சிக்கிறீர்கள் என கேட்ட போது நாகூரின் சகோதரியுடன் வேலுவிற்கு தொடர்பு இருந்த காரணத்தால் வேலுவை கொலை செய்வதாகவும், இதை பற்றி வெளியே கூறக்கூடாது என தங்களை மிரட்டியதாகவும், தொடர்ந்து வேலு இறந்த பிறகு ரவியின் வீட்டின் முன் காலியாக இருந்த பகுதியில் வேலுவின் உடலை அவர்கள் புதைத்துவிட்டதாகவும் கூறினார்கள்.

தொடர்ந்து ரவி கொல்லப்பட்ட வேலு புதைக்கப்பட்ட 20 நாட்களுக்கு பிறகு தினகர் மற்றும் ஜெயகாந்தை தொடர்பு கொண்டு தான் வீட்டை காலி செய்ய போவதாகவும், வேறொருவர் வீட்டிற்கு குடிவந்து வேலு புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தால் பிரச்சனையாகிவிடும் எனவே வேலுவின் உடலை வேறு இடத்தில் புதைத்துவிடும்படி கூறியுள்ளார்கள்.தொடர்ந்து தினகர் மற்றும் ஜெயகாந்த் வேலு புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பிணத்தை தோண்டி டிராவல் பையில் போட்டுக் கொண்டு பைக்கில் பட்டுப்புளிக்கு சென்று அங்கு தைலம்தோப்பில் சிதைந்த வேலுவின் உடலை புதைத்ததாகவும் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து பட்டுப்புளி பகுதிக்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீஸôர் விரைந்தனர். அங்கு பொன்னேரி வட்டாட்சியர் முரளி முன்னிலையில் பிரேத பரிசோதனை மருத்துவர் இளையமுருகன், தடயவியல் நிபுணர் இளங்கோவன் ஆகியோர் வேலுவை உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து வேலுவின் உடலின் பாகங்களை எடுத்தனர்.ஆனாலும் வேலுவின் உடலின் சில பகுதிகள் கும்மிடிப்பூண்டியில் முன்னதாக வேலு புதைக்கப்பட்ட இடத்தில் இருக்கலாம் என கருதி போலீஸôர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலுசாமி முன்னிலையில் அங்கு தோண்டினார்கள்.

இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கொலையில் முக்கிய தொடர்புடைய நாகூர் மற்றும் ரவி ஆகியோரை கும்மிடிப்பூண்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.