தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கடலில் தவறி விழுந்து மீனவர்  மாயம்

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தது அலை சிக்கி மாயமானர்.இந்த நிலையில் மாயமான மீனவரை தேடுவதற்கு போலீஸார் நடவடிக்கை நடவடிக்கை

Updated On :7 செப்டம்பர் 2014, 10:18 am

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தது அலை சிக்கி மாயமானர்.இந்த நிலையில் மாயமான மீனவரை தேடுவதற்கு போலீஸார் நடவடிக்கை நடவடிக்கை எடுத்து  வருகின்றனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 500 க்கு மேற்பட்ட படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன.இவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியான தனுஸ்கோடி,கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துள்ளனர்.இந்த நிலையில் கடலில் திடிர் என ஏற்பட்ட காற்றழுத்ததாழ்வால்  அடல் அலைகள் அதிகரிக்க தொடங்கியது.இதனைதொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த செட்டி குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் படகு அலையில் சிக்கியதில் படகிலிருந்து மீனவர் ஞானபிரகாசம்(42) தவறி கடலில் விழுந்து அலையில் சிக்கி மாயமானார்.மேலும் அவருடன் இருந்த சண்முகம்,முருகன்,தங்கச்சாமி ஆகிய 3 மீனவர்கள் மாயாமன மீனவரை தேடியுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் மீனவர் கிடைக்காததால் ராமேசுவரம் பகுதிக்கு ஞாயிற்று கிழமை காலையில் படகுடன் வந்து சேர்ந்தன.மேலும் தகவலறிந்த படகு உரிமையாளர் மாயாமன மீனவர் கூறித்து உரிமையாளர் ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்தில்  புகார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் சம்பவம் குறித்து அதிகாரிகள் மாயமான மீனவரை தேடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.