இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழழக வேளாண்மை, தோட்டக்கலை (B.Sc Agri/ horticulture) இரண்டாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் வேளாண்மை, பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கான (M.Sc Agri), (ME All Branches) அனைத்து வகுப்புகள், பொறியியல் (BE All Branches) படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், ஏடிஎஸ்பி திருமலைசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின்ஜோஸ்வா லாமேக், உதயக்குமார், பி.முருகானந்தம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வாயில்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேளாண்மை மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர் என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.