ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாமலைப் பல்கலை. பிஇ, பிஎஸ்சி விவசாயம் வகுப்புகள் தொடக்கம்

மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான

News image
Updated On :8 செப்டம்பர் 2014, 2:13 pm

ஜி.சுந்தரராஜன்

மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டத்தினால், மருத்துவம், பல் மருத்துவம் துறைகளை தவிர மற்ற அனைத்துதுறை வகுப்புகளுக்கு மறுஅறிவிப்பு வரை விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஆக.8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. பின்னர் மருத்துவம், பல மருத்துவம் ஆகிய துறைகளை தவிர, மற்ற துறைகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் விடுதிகளை காலி செய்து அனுப்பி வைத்தது.

அதன் பின்னர் மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த பிஇ முதாலாம் ஆண்டு வகுப்புகள், பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு வகுப்புகள் கடந்த ஆக.22-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக கலை (Faculty of Arts), அறிவியல் (Faculty of Sciences), கல்வியியல் (Faculty of Education), கடல் அறிவியல் (Faculty of Marine Science) மற்றும் இசைத்துறை (Dept of Music), இந்திய மொழிப்புலம் (Faculty of Indian Languages) அனைத்து பிரிவுகளின், அனைத்து வகுப்புகளும் கடந்த ஆக.27-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழழக வேளாண்மை, தோட்டக்கலை (B.Sc Agri/ horticulture) இரண்டாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் வேளாண்மை, பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கான (M.Sc Agri), (ME All Branches) அனைத்து வகுப்புகள், பொறியியல் (BE All Branches) படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், ஏடிஎஸ்பி திருமலைசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின்ஜோஸ்வா லாமேக், உதயக்குமார், பி.முருகானந்தம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வாயில்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேளாண்மை மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர் என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.