மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் அருகே சொகுசு காரில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள் 4 பேர் கைது!

காரில் ஆட்களை கடத்தி சென்ற சம்பவத்தைதான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போது ஆடுகளை கடத்திச் சென்று விற்பனை செய்யும் விநோதமான சம்பவம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில்

News image
Updated On :9 செப்டம்பர் 2014, 1:47 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சொகுசு காரில் சென்று ஆடுகளை திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ள விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

காரில் ஆட்களை கடத்தி சென்ற சம்பவத்தைதான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போது ஆடுகளை கடத்திச் சென்று விற்பனை செய்யும் விநோதமான சம்பவம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நடந்துள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமம் கரைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவர் தனது 4 ஆடுகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு காநல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீஸார், அபப்குதியில் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருத்தனர். அப்போது அவ்வழியே வந்த விலைஉயர்ந்த ஸைலோ சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 4 பேர், 6 ஆடுகளை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் போலீஸார் காரில் வந்த நெய்வேலியைச் சேர்ந்த அன்வர்அலி (34), கோபிநாத் (24), சக்திவேல் (21), இளையராஜா (30) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நெய்வேலியில் ஸைலோ காரை மைசூர் செல்வதாக கூறி வாடகைக்கு எடுத்து வந்து ஆடுகளை திருடியது தெரியவந்து 6 ஆடுகளை பறிமுதல் செய்துள்ளனர். திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.16 ஆயிரமாகும். மேலும் அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே காரில் சென்று இதுபோன்று ஆடுகள் திருடியதாகவும், இது இரண்டாவது முறை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப்பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து, கார் மற்றும் 6 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.