இவ்வழக்கில் போலீஸாரிடம் சரணடைந்த அண்ணாமலைநகர் தெற்கிருப்பு சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த பட்டாபிராமன் (28), சிவமணி என்கிற மணிகண்டன் (30), சிவன்கோயில் தெருவைச் பத்தாயிரம் என்கிற வெங்கடேசன் (29), அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன் (28) ஆகிய 4 பேர் 4 பேர், செப்.3-ம் தேதி இரவு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவ்வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த, சென்னை கொரட்டூர் அண்ணாநகரில் தற்போது வாடகை ஆட்டோ ஓட்டி வரும், சிதம்பரம் அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த பாபு (32) என்பவரையும், அண்ணாமலைநகரில் கோழி கறிக்கடை வைத்துள்ள சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் செப்.6-ம் தேதி சனிக்கிழமை கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.