முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மீது வழக்கு

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் இவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

News image
Updated On :10 செப்டம்பர் 2014, 1:27 pm

கோ.ஜெயக்குமார்

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் இவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, கரிவலம்வந்தநல்லூர், விசாலாட்சியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைசந்தனமாரி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11-வது அணியில் காவலராக வேலை செய்து வந்தார்.கிருஷ்ணன்கோவில், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமையா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் சந்திரசேகர் (27) என்பவர் கலைசந்தனமாரி வேலை செய்த இடத்தில் நாயக் (முதுநிலை காவலர்) ஆக வேலை செய்து வந்துள்ளார்.இருவரும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் காதலித்து, திண்டுக்கல் மாவட்டம், நாகல்நாயக்கன்பட்டி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 11.3.13-ல் பதிவு திருமணம் செய்துள்ளார்கள். பின்னர் மொட்டமலை புதிய காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் சந்திரசேகர் தனது மனைவியை காவலர் வேலையை ராஜூனாமா செய்யக் கூறியுள்ளார். கணவரின் பேச்சை நம்பி, கலைசந்தனமாரி வேலை ராஜூனாமா செய்துள்ளார்.சந்திரசேகரின் தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமையா (62) அவரது மனைவி முருகேஸ்வரி (52) ஆகியோரின் தூண்டுதலின் பேரில், சந்திரசேகர் தனது மனைவியிடம் 50 பவுன் நகை வரதட்சிணையாக வாங்கி வந்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி, தனியே விட்டுச் சென்றுவிட்டாராம்.

சந்திரசேகர் விடுப்பில் வந்திருப்பதை அறிந்து 29.4.14-ம் தேதி கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாமனார் ராமையா வீட்டிற்கு கலைசந்தனமாரி சென்றுள்ளார். அங்கிருந்த கணவரும், மாமியாரும் சேர்ந்து கலைசந்தனமாரியை அடித்து கீழே தள்ளி, ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதில் தலையில் கலைசந்தனமாரிக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் கலைசந்தனமாரி புகார் செய்தார். நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் சந்திரேசகர், முருகேஸ்வரி, ராமையா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.