ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பி.காம் மாணவருக்கு 9-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு செவ்வாய்கிழமை இரவு திருமணம் நடைபெற்றுள்ளது.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு செவ்வாய்கிழமை இரவு திருமணம் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி-வைத்தியலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 14 வயது மகள் இங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் பக்கத்து வீட்டில் பி.காம். 2-ம் ஆண்டு படிக்கும் கணேஷ்குமார் என்பவர் குடியிருந்து வருகிறார்.
கணேஷ்குமார் மாணவிக்கு மிட்டாய் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்து, தவறாக பழகியுள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து செவ்வாய்கிழமை இரவு கிராமத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து புதன்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பையையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...