ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் முற்றுகை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில்

News image
Updated On :10 செப்டம்பர் 2014, 1:33 pm

ஜி.சுந்தரராஜன்

பாசனத்திற்கு நீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாக கதவை பூட்டி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர், வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும், வடக்குராஜன் வாய்க்காலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளிக்க புதன்கிழமை காலை சென்றனர்.

ஆனால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி அலுவலக நிமித்தமாக சென்னை சென்றிருந்ததால், மனுவை பெற்றுக் கொள்ள யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அலுவலக வளாக கதவை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமரன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று அனைவரும் கலைந்து சென்றனர். வீராணம்ஏரியிலிருந்து வருகிற செப்.14-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.