மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

செக்மோசடி வழக்கு: அண்ணாமலைப் பல்கலை. இணைப் பேராசிரியர் கைது

சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த எஸ்.ராஜரத்தினம். இவரது மனைவி ஆர்.தீபா. இவர் சிதம்பரம் கனகசபைநகரில் 5-வது குறுக்குத்தெருவில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயந்திரவியல் துறை

News image
Updated On :11 செப்டம்பர் 2014, 2:37 pm

ஜி.சுந்தரராஜன்

செக் மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்ததின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த எஸ்.ராஜரத்தினம். இவரது மனைவி ஆர்.தீபா. இவர் சிதம்பரம் கனகசபைநகரில் 5-வது குறுக்குத்தெருவில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியர் பி.அசோக் என்பவரிடம் ரூ.21 லட்சம் பணம் கடனாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிக் கேட்டதற்கு கடந்த 20-7-2011 தேதியிட்ட தனியார் வங்கி காசோலையை எம்.பி.அசோக், தீபாவிடம் வழங்கியுள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.

இதுகுறித்து இணைப் பேராசிரியர் எம்.பி.அசோக்கிடம் காசோலை திரும்பியது குறித்து தெரிவித்து பல முறை பணம் கேட்டதாக தெரிகிறது. பணம் கொடுக்காததால், தீபா சிதம்பரம் குற்றவியல் நடுவர் எண்:2 நீதிமன்றத்தில், இணைப் பேராசிரியர் எம்.பி.அசோக் மீது செக்மோசடி குறித்து வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு விசாரணை குறித்து நீதிமன்றம் சம்மன் அளித்தும் எம்.பி.அசோக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து 3-11-2014 தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, நீதிபதி மருதுபாண்டி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அக்ஸடின் ஜோஸ்வா லாமேக், இணைப் பேராசிரியர் எம்.பி.அசோக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.