ரோப்கார் நிறுத்தத்தால் தற்போது மூன்று வழிகளில் வின்ச் மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தி வருவதால் வின்ச் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த நாட்களில் ரோப்காரின் பெட்டிகள், பேரிங்குகள், சாப்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உதிரி பாகங்கள் கழற்றி சீர் செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த உதிரிபாகங்கள் உடனடியாக மாற்றப்பட்டும் வருகிறது. கடந்த முறை மலைக்கோயில் மேலே இருந்த சுமார் 400கிலோ எடையுள்ள சாப்ட் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மலைக்கோயில் மேல்தளத்தில் உள்ள சாப்ட், கீழ் தளத்தில் உள்ள சாப்ட், சக்கரங்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக வியாழக்கிழமை கல்கத்தாவில் இருந்து சுமார் 800 கிலோ எடையுள்ள இரண்டு சாப்ட்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை இணைக்கும் பணி பொறியாளர் சுதீப்மண்டல் தலைமையில் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்க நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் மலைக்கோயில் மேலே உள்ள தளத்தில் சிறிய சக்கரங்கள் முதல் பெரிய சக்கரங்கள் வரை அனைத்தும் கழற்றி பேரிங் மாற்றப்பட்டு வடக்கயிற்றில் இணைக்கப்பட்டும்.