9-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: கல்லூரி மாணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கல்லூரி மாணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக இரு வீட்டார் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கல்லூரி மாணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக இரு வீட்டார் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி-வைத்தியலிங்காபுரம், நாடார் தெருவைச் சேர்ந்தவர் கு.கந்தசாமி (37). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களின் 14-வயது மகள் வன்னியம்பட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர் ச.மாரிமுத்து. இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் மகன் கணேஷ்குமார் (24), ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கணேஷ்குமார் குறிப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவிக்கு அவ்வப்போது மிட்டாய் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்து தவறாக பழகி வந்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் செவ்வாய்கிழமை இரவு கிராமத்தில் உள்ள பிள்ளையார்கோவில் முன்பு திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள். இது குறித்த குழந்தைகளுக்கு எதிரான அமைப்பின் பத்மாவிற்கு தகவல் கிடைத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது.
இது குறித்து மாணவி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தல் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணேஷ்குமாரைக் கைது செய்தனர். மேலும் இவரது பெற்றோர் மாரிமுத்து, மணிமேகலை மற்றும் மாணவியின் பெற்றோர் கந்தசாமி, கோவிந்தம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...