ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நிரம்பி வரும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி: பாசனத்திற்கு நீர் திறக்காததால் பயிர்கள் கருகும் அபாயம்

வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.07 அடியாக உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து விநாடிக்கு நூறு கனஅடி வடவாறு வழியாக வந்து

News image
Updated On :14 செப்டம்பர் 2014, 1:17 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி நிரம்பி வருகிறது. இன்னும் ஒரிரு தினங்கள் ஏரி முழுக்கொள்ளளவை அடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.07 அடியாக உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து விநாடிக்கு நூறு கனஅடி வடவாறு வழியாக வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 77 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

பாசனத்திற்கு நீர் திறக்காகதால், பயிர்கள் கருகும் அபாயம்: காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களுக்கு 50 சதவீதத்திற்கு மேலான விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்டு இறுதியிலும், செப்டம்பர் முதல்வாரத்தில் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள், தற்போது தேவையான நீர் இல்லாததால், மழையை நம்பி உள்ளனர். மழை பெய்யாவிடில் பயிர்கள் கருகிவிடும். கடந்த ஆண்டை போல மீண்டும் நெல்லை விதைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக நீரை தேக்கி வைப்பதில் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசனத்திற்கு நீர் திறப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் ஆண்டு தோறும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகள் பாதிப்படைந்து, விவசாய தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். காலதாமதமாக நீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகளுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தண்ணீர் வரவில்லை என்றால் நேரடி விதைப்பு செய்துள்ள பயிர்கள் கருகிவிடும் என்கிறார் தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.