மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கார் மீது தாக்குதல்: 4 பேர் கைது

சிதம்பரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் கார் மீது மர்மநபர்கள் தாகுத்தல் நடைபெற்றுள்ளது

News image
Updated On :16 செப்டம்பர் 2014, 12:01 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் கார் மீது மர்மநபர்கள் தாகுத்தல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து புவனகிரி போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள வ.க.செல்லப்பன், திங்கள்கிழமை இரவு சிதம்பரம் அருகே நாலாந்திட்டு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியுள்ளார். அப்போது அழிச்சிக்குடி புதுவாய்க்கால் அருகே மறைந்திருந்த மர்மநபர்கள் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காரின் முன்புறக்கண்ணாடி உடைந்து சேதமுற்றது. இதுகுறித்து வ.க.செல்லப்பன் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (22), அருண் (20), இமானுவேல் என்கிற பார்த்தசாரதி (19), தருமவேல் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் புவனகிரி போலீஸார் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.