கடந்த மே.3-ம் தேதி மாரியப்பாநகரில் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் என்பவர் படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. இதனை அடுத்து தொடர் சம்பவமான சிதம்பரம் அண்ணாமலைநகரில் கலுங்குமேட்டில் வசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), அவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கடந்த செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று வெடிகுண்டு வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர்.