சிதம்பரம் தேரடிகடைத்தெருவில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய துணிமணிகள் கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீ பிடித்து பரவியது. தீ பரவி அருகில் இருந்த மாடசாமி பழைய இரும்புக்கடை, இந்திராணி தையல் கடை, அஸ்கர்அலி எலக்ட்ரிக் கடை, மணிகண்டன் மர இழைப்பகம் ஆகிய கடைகள் தீயில் எரிந்து சேதமுற்றனர். தகவல் அறிந்த நிலைய அலுவலக் ஜகாங்கீர்முகமது தலைமையிலான சிதம்பரம் தீயணைப்பு மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இத்தீவிபத்தில் மேற்கண்ட கடைகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.