ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரத்தில் 5 கடைகள் எரிந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

சிதம்பரம் தேரடிகடைத்தெருவில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய துணிமணிகள் கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீ பிடித்து பரவியது. தீ பரவி அருகில் இருந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2014, 11:35 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமுற்றன.

சிதம்பரம் தேரடிகடைத்தெருவில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய துணிமணிகள் கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீ பிடித்து பரவியது. தீ பரவி அருகில் இருந்த மாடசாமி பழைய இரும்புக்கடை, இந்திராணி தையல் கடை, அஸ்கர்அலி எலக்ட்ரிக் கடை, மணிகண்டன் மர இழைப்பகம் ஆகிய கடைகள் தீயில் எரிந்து சேதமுற்றனர். தகவல் அறிந்த நிலைய அலுவலக் ஜகாங்கீர்முகமது தலைமையிலான சிதம்பரம் தீயணைப்பு மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.  இத்தீவிபத்தில் மேற்கண்ட கடைகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.

கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆறுதல்: சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலை தீ விபத்து நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும்  அவர் சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகரிகளை தொடர்பு கொண்டு தீவிபத்து குறித்து உரிய நிவாரண நடவடிக்கைகளை வழங்குமாறு வலியுறுத்தினார். எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், நடைபாதை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் வஜ்ரவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அதிமுகவினர் உதவி: தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு, கடை உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுடன் நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.