இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து வைத்துள்ள ராமேசுவரம் உள்பட தமிழக பகுதி மீனவர்களின் படகுகளை விடுவிக்க கூடாது என்பது உள்பட மீனவர்களுக்கு எதிராக அவதூரான பேச்சுகளை தொலைக்காட்சியில் பேட்டியளித்தாக பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிசுவாமி மீது நடவடிக்கை எடுக்ககோரி தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் ராமேசுவரம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு கூடுத்துள்ளார்.
ராமேசுவரம்,மண்டபம்,பாம்பன் உள்பட தமிழக பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில மாதங்களாக இந்திய கடலோரப்பகுதிகளில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உட்பட்டு படகுகளையும்.மீன்பிடிசாதனங்களையும் சேதப்படுத்தி பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கை கடற்படையினரிடம் படகுகளை பறிகூடுத்து வாழ்வாதரங்களை இழந்து வரும் தமிழக மீனவர்களைப்பற்றி பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிசுவாமி தொலைக்காட்சியில் ராமேசுவர்ம மீனவர்கள் கடலில் மீன்வளத்தை அழித்து அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடிக்க இலங்கை கடல் பகுதிக்கு செல்வதாகவும், ஆதாலால் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ள படகுகளை விடுவிக்ககூடாது எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டனர்.மேலும் சுப்பிரமணியின் பேச்சை கண்டித்து பல்வேறு பகுதியிகளில் மீனவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து உருவபொம்மைகள் எரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.இந்த நிலையில் பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிசுவாமி பேச்சு தாய் நாட்டிற்கு எதிராகவும், அயல் நாட்டிற்கு ஆதராகவும் பேசியதால் தமிழக மீனவர்களின் மத்தியில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாகவும்,தேசத்திற்கு துரோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் மீனவர் நல்லதம்பி நடவடிக்கை எடுக்கோரி ராமேசுவரம் டி,எம்,பியிடம் புகார் மனு கூடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து போலீஸார் இப்புகார் கூறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! வளைகுடா நாடுகள் தலையிட வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

