நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஓய்வுபெற்ற எஸ்ஐ உள்ளிட்ட இருவர் மீது மோசடி வழக்குப் பதிவு

பழனி பட்டத்துவினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி.  இவர் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆவார்.  அதே பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி.  இவர்கள் இருவரும் சேர்ந்து பழனியை

News image
Updated On :21 செப்டம்பர் 2014, 12:19 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., உள்ளிட்ட இருவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி பட்டத்துவினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி.  இவர் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆவார்.  அதே பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி.  இவர்கள் இருவரும் சேர்ந்து பழனியை அடுத்த கணக்கன்பட்டி ராஜாபுரம் புதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் செல்லமுத்து என்பவரிடம் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளனர்.  கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பாக்கி பணம் ரூ.10,50,000 ஐ தராமல் இருவரும் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சனிக்கிழமை பழனி டவுன் ஆய்வாளர் புகழேந்தி பெரியசாமி, உமாமகேஸ்வரி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.