டிராக்டர் மோதி விவசாயி பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த நாரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் ஏழுமலை. விவசாயியான இவர் எளாவூர்-சுண்ணாம்புகுளம் சாலையில் உள்ள மூலரோடு சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார்.


கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர்-சுண்ணாம்புகுளம் சாலையில் உள்ள மூலரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஏழுமலை(33) என்பவர் பலியானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த நாரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் ஏழுமலை. விவசாயியான இவர் எளாவூர்-சுண்ணாம்புகுளம் சாலையில் உள்ள மூலரோடு சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியே வந்த டிராக்டர் ஒன்று ஏழுமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலை பொன்னேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் பலியான ஏழுமலைக்கு கலா என்ற மனைவியும் 1 மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சம்பவம் குறித்து கலா அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...