அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களின் விளைவாக, பல்கலைக்கழகத்தை அரசு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு மேலும் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களின் விளைவாக, பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகியாக, தமிழகஅரசு முதன்மை செயலர்களில் ஒருவரான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸை கடந்த 2013 ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்தது. அவர் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகியாக பொறுப்பேற்றார். மேலும் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிர்வாகியாக பொறுப்பேற்ற பின்னர் அவர் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நிதிநெருக்கடியை சரி செய்து வருகிறார். மேலும் கடந்த 2013-14 கல்வி ஆண்டில் பிஇ. பிஎஸ்சி வேளாண், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ். பிடிஎஸ், பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், எம்இ, பிஎட் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையில் நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை நடத்தியதால் பெற்றோர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த 2014-15 கல்வி ஆண்டில் நுழைவுத்தேர்வு இல்லாமல் நேரடியாக மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டது. இதனால் தகுதி வாய்ந்த மாணவர்கள் எவ்வித நன்கொடை இன்றி அனுமதி சேர்க்கை பெற்றனர். மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை, பொறியியல், மருத்துவம், கலை, உடற்கல்வி, கல்வி, கடல் அறிவியல் உள்ளிட்ட அனைத்து புலங்களில் பல்வேறு கல்வி வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கணினி திறன் பயிற்சி, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், ஆசிரியர்களுக்கு கல்வி பயிற்சி என பல்வேறு பல்வேறு பயிற்சிகளை நடத்தி பல்கலைக்கழதத்தை தரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது பதவிகாலம் புதன்கிழமையுடன் முடிவடைவதால் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா ஓராண்டு பதவிநீட்டிப்பு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு, பதிவாளர் என்.பஞ்சநதம், புல முதல்வர்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜே.வசந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் சந்திரசேகர் மற்றும் அனைத்து புல முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...