தேசிய ரத்த தான தினம்: அண்ணாமலைப் பல்கலை நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா ரத்த தானம்
தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா ரத்ததானம் வழங்கினார்.


தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா ரத்ததானம் வழங்கினார்.
சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்தவங்கியில் குறைந்த அளவே ரத்தம் உள்ளதால், தேசிய ரத்ததானத்தை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யூத் ரெட்கிராஸ் அமைப்பினர் ரத்ததானம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து ரெட்கிராஸ் அமைப்பு மாணவ, மாணவியர்கள் மிட்டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை வியாழக்கிழமை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று ரத்ததானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சுமார் 75 யூனிட் ரத்தத்தை மாணவ, மாணவியர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம், வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார், கலைப்புல முதல்வர் ஆர்.ராஜேந்திரன், யூத் ரெட் கிராஸ் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜி.செந்தில்குமார், சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி தலைவர் டாக்டர் கே.பாண்டியன், கடலூர் இந்தியன் ரெட்கிராஸ் தலைவர் ஆர்.எம்.பாலசுப்பிரமணியன், திட்ட அலுவலர்கள் ஜே.நம்பி, வி.பாலமுருகன், ஸ்ரீமன் நாராயணன், டார்வின், கிருஸ்துதாஸ் ஹென்றி, எம்.சந்திரசேகரன், டி.பழனிசாமி, டி.கே.செந்தில்முருகன், எம்.அசோக்குமாப், எஸ்.பாலு, எம்.பிரதாப், எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...