முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தை கொலை: மகன் தலைமறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2014, 4:19 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.

 இவரது மகன் பாண்டி (35) கொத்தனார் வேலை செய்து வருகிறார். ஒரே வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்கள்.இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வந்த சுப்பையாத்தேவர் வீட்டில் குளித்துள்ளார். வீட்டினுள் பாண்டியின் மனைவி தரையில் படுத்திருந்துள்ளார். அவரது தலையின் அருகே நின்று, நின்று சுப்பையாத்தேவர் காலுக்கு எண்ணெய் தேய்த்து கொண்டிருந்துள்ளார்.

இதனைப் பார்த்து ஆத்திரமுற்ற மகன் பாண்டி, என் மனைவியை ஏன் தவறாக பார்க்கிறீர்கள் என்று கூறி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இவர் தனது துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மகள் காளீஸ்வரி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கு நடந்த சம்பவத்தை சுப்பையாத்தேவர் மகளிடம் கூறியுள்ளார்.

சற்று நேரத்தில் அரிவாளுடன் காளீஸ்வரி வீட்டிற்கு வந்த பாண்டி, தந்தை சுப்பையாத்தேவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து காளீஸ்வரி, மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.