முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொடக்கப் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வர வேண்டும்

தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே, நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக காவல் தலைவர் கே.சொக்கலிங்கம் கூறினார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2014, 5:39 am

கோ.ஜெயக்குமார்

தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே, நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக காவல் தலைவர் கே.சொக்கலிங்கம் கூறினார்.

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. துறை சார்பில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவல் துறைத் தேர்வுகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து காவல் துறைத் தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில் கூறியதாவது: முதலாம் வகுப்பில் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைகளிடம் வர வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற பயிற்சிகளை தொடக்கப் பள்ளியில் 1-முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று 26 உயர் பதவிகள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், உற்றார் உறவினர் போற்றும் வகையில் உள்ளன. ஆனால் அனைத்திற்கும் ஒரே தேர்வு முறைதான். அதில் பெறும் மதிப்பெண் தகுதிகளைப் பொறுத்து அந்ததந்தப் பதவிகள் கிடைக்கும்.

மாணவர்கள் சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.ஆர்.டி. பாடதிட்டத்தின் கீழ் படித்தால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வில் நுழைவது எளிது. மாணவர்களிடம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்திகளும் உள்ளன. அதனை வெளிக்கொணர்ந்தால் திறமைகள் வெளிப்படும். இதற்கு தடங்கல், இடையூறு, சோதனை, வேதனைகள் வரும். அதையும் தாண்டி வெளிக்கொணர்ந்து மற்றவர்களுக்கும், உற்றார்க்கும் வழிகாட்டியாக இருக்க முடியும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள்தான் எதிர்காலச் சிற்பிகள். மாணவர் சக்திதான் மகத்தான சக்தி. ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவியால் தாய் பெறும் மகிழ்ச்சி, உற்றார் பெறும் மகிழ்ச்சி எல்லையற்றது. கருமமே கண்ணாயினார் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்றார் அவர்.  கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் சக்திவேல்ராணி வரவேற்றார்.  ராஜஸ்தான் மாநிலம் கிரோகி மாவட்ட ஆட்சியர் வி.சரவணகுமார், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், ராஜபாளையம் ஏ.எஸ்.பி. சாம்பிரயக்குமார், எஸ்.பி. ஆண்டனி, டாக்டர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கருத்துரையாற்றினர்.
எம்.பி.ஏ. துறையின் பேராசிரியர் யவனராணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.