முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு மாலை அனுப்பும் நிகழ்ச்சி

திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சாற்றுவிக்க, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பூமிப்

News image
Updated On :28 செப்டம்பர் 2014, 11:54 am

கோ.ஜெயக்குமார்

திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சாற்றுவிக்க, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பூமிப் பிராட்டியான ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளன்று சாற்றப்படுவது வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இவற்றை கோயில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் தலையில் பட்டர்கள் மாட வீதிகள் வழியே எடுத்து வந்தார். பின்னர் இவை தனிக் காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.