அதிமுகவினரை திட்டி மிரட்டியதாக தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் தண்டனை விதித்ததை கண்டித்து அதிமுகவினர் கடந்த செப்.26-ம் தேதி ஊர்வலமாக வந்தனர். அப்போது தேமுதிகவினர் நகரச் செயலாளர் சி.


சிதம்பத்தில் அதிமுரவினரை திட்டி மிரட்டியதாக தேமுதிகவினர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் தண்டனை விதித்ததை கண்டித்து அதிமுகவினர் கடந்த செப்.26-ம் தேதி ஊர்வலமாக வந்தனர். அப்போது தேமுதிகவினர் நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார் தலைமையில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டிருந்தனர். அப்போது தேமுதிகவினர் மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் தூண்டுதலின் பேரில் அதிமுகவினரை திட்டி மிரட்டியதாக அதிமுக கிளை செயலாளர் ரவிச்சந்திரன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நகர போலீஸார் கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் தூண்டுதலின் பேரில் அதிமுகவினரை நகரச் செயலாளர் விஜயகுமார், பாலு, பாலகிருஷ்ணன், ஐயப்பன், கணேசன் உள்ளிட்ட அடையாளம் தெரிந்த 14 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் திட்ட மிரட்டியதாக வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...