அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஜெயலலிதா கைது: சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் மற்றும் அதிமுகவினர், கிள்ளை பேரூராட்சி தலைவர் சி.வித்தியாத்தித்தன்

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 1:47 pm

ஜி.சுந்தரராஜன்

ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் மற்றும் அதிமுகவினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் மற்றும் அதிமுகவினர், கிள்ளை பேரூராட்சி தலைவர் சி.வித்தியாத்தித்தன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கே.அசோகன், சிதம்பரம் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லைசேகர், சிம்மக்குரல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவ பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்குமாறு கோஷமிட்டனர். இதேபோன்று கடலோர கிராமங்களான சின்னூர், புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.