சிதம்பரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம், கடை அடைப்பு
போராட்டத்திற்கு நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.என்.


ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியதை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகே அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் கீதா கலியமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், முன்னாள் நகரச் செயலாளர் கே.கலியபெருமாள், வேளாண் விற்பனை சங்கத் தலைவர் பாச.மில்லர், தலைமைக்கழக பேச்சாளர் கோ.ஜெயவேல், தில்லை கோபி, தில்லைசெல்வம், சிம்மக்குரல் சேகர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், தொகுதி இணைச்செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, பரங்கி்ப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கே.அசோகன், துணைத் தலைவர் திருமாறன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நகர மாணவரணி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். உண்ணாவிரத்தில் 100 பெண்கள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மொட்டை அடித்துக் கொண்ட அதிமுகவினர்: உண்ணாவிரதப் பந்தலில் ஜெயலலிதா விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுகவைச் சேர்ந்த மாரிபாஸ்கர், பழக்கடை நடராஜ், பேச்சாளர் மணி, பக்கிரி உள்ளிட்ட 16 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.
சிதம்பரத்தில் கடைஅடைப்பு: சிதம்பரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதத்தை அடுத்து, நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் அமைதியாக நடைபெற்றது. மேலரதவீதியில் உள்ள காய்கறி மார்க்கெட், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...