அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 40 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை

News image
Updated On :30 செப்டம்பர் 2014, 1:10 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 40 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 40 பேர் கடந்த ஜூலை மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் சிஐடியு கடலூர் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நேரில் வலியுறுத்தினர். மேலும் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 40 ஒப்பந்தத் தொழிலாளர்களும், பணி வழங்க வேண்டி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கிளை செயலாளர் பத்மா தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தை கடலூர் மாவட்ட சிஐடியு தொழிற்சங்க இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.