வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

என் வாழ்விற்கு வளம் கொடுத்த திருக்குறள் : அப்துல் கலாம் பேச்சு

எனக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள் என்று கூறியுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற திருக்குறளே என் வாழ்விற்கு வளம் கொடுத்த குறள் என்று குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :21 ஜூன் 2014, 4:12 pm IST

எனக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள் என்று கூறியுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற திருக்குறளே என் வாழ்விற்கு வளம் கொடுத்த குறள் என்று குறிப்பிட்டுள்ளார்.

"தினமணி'யும் சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் "தமிழ் இலக்கியத் திருவிழா'வை மேனாள் குடியரசு தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இன்று காலை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, எனக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள். அதிலும் ஒரு குறள் எனது வாழ்வுக்கு வளம் சேர்த்தது. அது என்னவென்றால்,

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.

இந்த குறள்தான் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும்.

பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.

இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமே.

உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு.  கனவு காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும்.

தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும்.

அனைத்து இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள் என்று பேசி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.