துவாக்குடி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது

திருச்சி துவாக்குடி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், கொலைக்கு பயன்படுத்திய
Updated on
1 min read

திருச்சி துவாக்குடி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

துவாக்குடி வடக்குமலை வ.உ.சி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முனீஸ்வரன் (45). அதிமுக பிரமுகர். இவர் கடந்த 2-ம் தேதி இரவு வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.இதுகுறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு துவாக்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் பெல் நகரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக 3 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், போலீஸாரை பார்த்ததும் வந்த வழியே வேகமாகச் சென்றனர். இதை கவனித்த போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் துவாக்குடி, எம்.டி சாலையைச் சேர்ந்த பிரகாஷ் (30), ஜித்து (24), ராமச்சந்திரன் (25), தஞ்சை மாவட்டம், பொன்னுவிளைந்தான்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் (44) என்பதும், முன்விரோதத்தில் முனீஸ்வரனை இவர்கள் கொன்றதும் தெரியவந்தது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மண்பாடி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக  பிரகாஷின் அண்ணன் பிச்சைமணி தரப்புக்கும், முனீஸ்வரன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணனுக்கு ஆதராவாக பிரகாஷ் முனீஸ்வரனை கண்டித்துள்ளார்.கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 31-ம் தேதி பெல் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிச்சைமணி உயிரிழந்தார்.இதற்கிடையே முனீஸ்வரனிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த மணிகண்டன் பிரகாஷிடம் வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த மாதம் மணிகண்டனை பார்த்த முனீஸ்வரன், மீண்டும் தன்னிடம் வேலைக்கு வரும்படி வற்புறுத்தினராம். அவர் வர மறுத்ததால் பிச்சைமணியை கார் மோதி கொன்றதுபோல் உன்னையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுபற்றி மணிகண்டன் பிரகாஷிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கடந்த 2-ம் தேதி இரவு தனது நண்பர்கள் உதவியுடன் முனீஸ்வரனை அரிவாளால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட நபர்களை கைது செய்த போலீஸôர், இவர்களுக்கு உடந்தையாக இருந்த எம்.டி சாலை பகுதியைச் சேர்ந்த முத்துபாண்டி (24), கார் ஓட்டுநர் மணிகண்டன் (24), ரஜினி (எ) கருப்பையா (31), பொன்னுவிளைந்தான்பட்டி பழனிசாமி (45), சுரேஷ் (33) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரகாஷின் மற்றொரு சகோதரர் நாகலிங்கம் (33), கார் ஓட்டுநர் திருமால், விஜய், கார்த்திக் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com