கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சப்த நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர்

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்களால் சப்த நதிகளில் இருந்து புனித நீர் ஞாயிற்றுக்கிழமை கொண்டு

News image
Updated On :13 ஏப்ரல் 2015, 1:19 pm

ஜி.சுந்தரராஜன்

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்களால் சப்த நதிகளில் இருந்து புனித நீர் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.. பின்னர் புனிதநீரை ஊர்வலமாக நான்குவீதிகள் வலம் வந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும்  மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற ஏப்.23-ம் தேதி முதல் 12 கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெறுகிறது.

கும்மாபிஷேகத்திற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, (திரிவேணி சங்கமம் அலகாபாத்) , சிந்து (காஷ்மீர்) , கோதாவரி (ஆந்திரா),  தலைகாவிரி(கர்நாடகா),  நர்மதா (ஓங்காரிஸ்வரா) ஆகிய சப்த நதிகளில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டு வர பல்வேறு பிரிவுகளாக பொதுதீட்சிதர்கள் சென்றர்.  இவர்கள் அனைவரும் சென்னையில் ஒருங்கிணைந்து சப்த நதிகளில் புனிதநீருடன் திங்கள்கிழமை ரயில் மூலம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர்.

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த புனதநீரை எடுத்து வந்த பொதுதீட்சிதர்களுக்கு இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் மற்றும் திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.  பின்னர் புனித நீர் குடங்கள் நான்குவீதிகளிலும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று புனிதநீரை வரவேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களிள் கமிட்டி செயலாளர் ஜ,சர்வேஸ்வரதீஷதர்,   கும்பாபிஷேகம் கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா    தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.