பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ரேசன் கடை கோரி பொதுமக்கள் முற்றுகை

முக்கூடல் அருகே கலியன்குளம் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு

News image
Updated On :13 ஏப்ரல் 2015, 1:44 pm

ஷேக் அப்துல்காதர்

முக்கூடல் அருகே கலியன்குளம் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு முற்றுகையிட்டனர்.

முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட கலியன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள முக்கூடலில் இயங்கி வரும் ரேசன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.தொலைதூரத்தில் இயங்கும் ரேசன் கடைக்கு பொதுமக்கள் அடிக்கடி செல்ல முடியாத நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளது. குடும்ப அட்டைக்கு அனைத்து பொருட்களும் கிடைக்காமல் இங்கு வசிக்கும் ஏழை எளிய  மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிராம மக்கள் நிதி வசூலித்து  ரேசன் கடைக்கு தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளனர். எனினும் அங்கு ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கலியன்குளம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்ட பேரூராட்சி உறுப்பினர் எஸ். பாலசுப்பிரமணியன், ஒன்றிய மக்கள் அமைப்பின் நிர்வாகி ஜோதி ஆகியோர் தலைமையில் ரேசன் கடை அமைக்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.