மேலிருப்பு கிராமத்தில் தனிநபர் நிலம் கையகப்படுத்தி ஆக்கிரமிப்பு: கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு
பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மேலிருப்பு கிராமத்தில் தனிநபர் அரசு புறம்போக்கு இடத்தை கையகப்படுத்தி


பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மேலிருப்பு கிராமத்தில் தனிநபர் அரசு புறம்போக்கு இடத்தை கையகப்படுத்தி ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதனால் அக்கிராமத்தில் மின்மாற்றி அமைப்பதிலும் நூலகம், கதிரடிக்கும் கலம் அமைப்பதற்கு இடம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் தனிநபரிடம் இருந்து நிலத்தை மீட்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பன்ருட்டி வட்டாட்சி அலுவலகம் முன்பு 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்பின்னர், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வட்டாச்சியுடன் சமரசம் ஏற்பட்டது. இதனால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
வட்டாச்சியர் ரவிகுமார், வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார், நிலஅளவர் சந்திரசேகர், கிரம நிர்வாக அதிகாரி தங்கம் ஆகியோர் மேலிருப்பு கிராமத்திற்கு சென்று மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...