6 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை வீடியோ படமாக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்
20 தமிழர்கள் அன்மையில் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


20 தமிழர்கள் அன்மையில் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கண்ணமங்கலத்தை அடுத்த வேட்டகிரிபாளையம், படவேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 6 பேரின் உடலின் மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவர்களது உறவினர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 6 பேரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து ஆந்திர மாநிலம் உஸ்மானிய பல்கலைக்கழத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட மருத்துவக்குழு ஏற்கெனவே 20 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவக்குழு, இவ்விரு குழுக்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வந்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 6 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் வந்து கொண்டிருக்கின்றனர். மறுபிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ படமாக்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களுக்கு இடம் தரப்படவில்லை. மருத்துவக்குழு வந்தவுடன் பிரேத பரிசோதனை தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...