பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நான்குனேரியில் அதிகபட்சம் 178 மி.மீ: நெல்லையை குளிர்வித்த கோடை மழை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் நிம்மதியடைந்தனர். நான்குனேரியில் அதிகபட்சமாக 178 மி.மீ, களக்காட்டில்

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 9:40 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் நிம்மதியடைந்தனர். நான்குனேரியில் அதிகபட்சமாக 178 மி.மீ, களக்காட்டில் 106.4 மி.மீ மழையும் பெய்துள்ளது.

கோடை வெயிலின் உக்ரம் அதிகமாக காணப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் அருந்தி வெயிலின் தாக்கத்தை தணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனினும் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து மக்களுக்கு நிம்மதியை அளித்து வருகிறது.

திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): நான்குனேரியில் அதிகபட்சம் 178, களக்காடு 106.4, தென்காசி 5.2,செங்கோட்டை 16, ஆய்க்குடி 8.2, ஆலங்குளம் 29.4, பாளையங்கோட்டை 27, திருநெல்வேலி 24, அம்பாசமுத்திரம் 11, கன்னடியன் அணைக்கட்டு 11, சேரன்மகாதேவி 18, ராதாபுரம் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் நீர்பிடிப்பு பகுதியில் பாபநாசம் அணை 10, சேர்வலாறு அணை 15, மணிமுத்தாறு அணை 20.6, ராமநதி அணை 10, கருப்பாநதி அணை 12, குண்டாறு அணை 7, அடவிநயினார் அணை 20, நம்பியாறு அணை 4, கொடுமுடியாறு அணை 35 மி.மீ மழை பெய்துள்ளது.களக்காடு, நான்குனேரி பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் அறுவடை பருவத்தில் ஏராளமான வாழைகள் சாய்ந்து சேதமடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அருவிகளில் நீர்வரத்து:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருவதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 74.10 அடி, சேர்வலாறு அணை 86.29 அடி, மணிமுத்தாறு அணை 85.29 அடி, கடனாநதி அணை 39.50 அடி, ராமநதி அணை 25 அடி, கருப்பாநதி அணை 28.54 அடி, குண்டாறு அணை 15.08 அடி, அடவிநயினார் அணை 10.75, வடக்குப் பச்சையாறு அணை 23, நம்பியாறு அணை 12.99 அடி, கொடுமுடியாறு அணை 2.50 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.