மதுபானக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி உள்பட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தரேவு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக, திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அதன் பின்னரும், அந்த மதுபானக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.இதனால் ஆத்திரமடைந்த மாதர் சங்கத்தினர், அந்த மதுபானக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலர் ஜி.ராணி, தலைவர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சம்பந்தப்பட்ட மதுபானக் கடைக்கு காலை 8 மணிக்கு பூட்டுப் போட்ட மாதர் சங்கத்தினர், தொடர்ந்து கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ கே.பாலபாரதி தெரிவித்தது:சித்தரேவு பகுதி பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதிகப்பை ஏற்படுத்தும் மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட மதுபானக் கடைக்கு அருகில் பள்ளிக்கூடம், கோயில், 3 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுக்கச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார் அவர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கலால் துறை கோட்ட உதவி ஆணையர் சேதுராமன் பேச்சு வார்த்தை நடந்தினார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸர், எம்எல்ஏ பாலபாரதி, மாதர் சங்க நிர்வாகிகள் ராணி, சுதா, சூசை மேரி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை கைது செய்தனர்.
கைது நடவடிக்கைக்கு பின், பிற்பகல் 1 மணிக்கு சித்தரேவு மதுபானக் கடை திறக்கப்பட்டது. பூட்டுப் போடும் போராட்டம் காரணமாக, சித்தரேவு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செஞ்சி பகுதியில் பலத்த மழை
நாய் மீது மொபட் மோதி விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவா் மாயம்
இளைஞா் மா்ம மரணம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
