பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடனாநதி அணையின் நீர்மட்டம்

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 10:25 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடனாநதி அணையின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து 52 அடியாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் குறைந்து காணப்படுகிறது. இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 45 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 53 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 43.6 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 10 மி.மீ மழையும், ராமநதி அணையில் 5 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 8 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் குறைந்த கொள்ளளவை கொண்ட கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் கடனாநதி அணையின் நீர்மட்டம் 25 அடியும், ராமநதி அணையின் நீர்மட்டம் 10 அடியும் உயர்ந்துள்ளது.

தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதியில் நீடித்து வரும் மழையால் அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 6.25 அடி நீர்மட்டம் உயர்ந்து 17 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.60 அடி உயர்ந்து 32.81 அடியாகவும் அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 600 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 38 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 27 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 74.25 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 87.33 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.10 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.40 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.