/

பன்ருட்டியில் ரூ.3.20 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்ப்பில் நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி....

News image
Updated On :30 ஏப்ரல் 2015, 6:48 am

சீனிவாசன்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்ப்பில் நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நீதி ரூ.3.20 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பன்ருட்டி ஒன்றியம் முத்தாண்டிகுப்பத்தில் நடந்த விழாவில் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் சொரத்தூர். இரா ராஜேந்திரன், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன், 42 மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மூன்று சக்கர வண்டி ஸ்கூட்டியும், 30 பேருக்கு மூன்று சக்கர சைக்கிளும், 10 மடக்குசக்கர நாற்காலியையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர்கள் பன்ருட்டி கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், முடம்நீக்கியியல் அலுவலர் ஜெயராமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.