போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 10:45 am

சுஜித்குமார்

புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுவை அடுத்த குரும்பாபபேட்டில் பெருந்தலைவர் காமராஜர்வேளாண்மை அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 500-க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி புதன்கிழமை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வேளாண்மை நிலைய வாயிலில் போராட்டம் நடத்தினர். பின்னர்  சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி தகவலறிந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் வேளாண்மை அறிவியல் நிலைய ஊழியர்களின் போராட்டத்துக்கு  காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.