சென்டாக் பொறியியல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
புதுவை சென்டாக் பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு காலாப்பட்டு பாண்டிச் சேரி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.


புதுவை சென்டாக் பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு காலாப்பட்டு பாண்டிச் சேரி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.
பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 2000 பொறியியல் பாடப்பிரிவு இடங்களுக்கு 5218 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5126 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. மாணவர்களுக்கு ஆர்வமில்லை.
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவ, மாணவியரிடம் போதிய ஆர்வமில்லாத நிலை காணப்பட்டது. முதல் பிரிவு கலந்தாய்வில் 150 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதில் வெறும் 10 பேரே பங்கேற்றனர். பிற்பகலில் பி.பார்ம் படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 900-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதுதொடர்பானவழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் தீர்ப்பு வெளியான பின்னரே எஸ்.சி. பிரிவினருக்கான மருத்துவ, பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...