ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் காயமுற்ற இருவருக்கு ரூ.15.72 இழப்பீடு வழங்க ஆணை

இரு விபத்துக்களில் காயமுற்ற இருவருக்கு ரூ.15.72 லட்சம் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க

News image
Updated On :11 ஆகஸ்ட் 2015, 5:20 pm

கோ.ஜெயக்குமார்

இரு விபத்துக்களில் காயமுற்ற இருவருக்கு ரூ.15.72 லட்சம் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையம், வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (29). இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். 19.5.13-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-தென்காசி சாலையில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கருப்பையாவின் தொடை எலும்பு முறிந்தது.

இதனையடுத்து அவர் தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், ராஜபாளையம் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, கருப்பையாவிற்கு ரூ.8,79,010 வழங்க உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு:

வத்திராயிருப்பு, மறவர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (30). இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். 2.11.12-ம் தேதி ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேன் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சுந்தர் காயமடைந்தார். தனக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், மதுரை தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, சுந்தருக்கு ரூ.6,93,770 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.